காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபில் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, "பணமோசடி தடுப்புச் சட்டம் ஒரு புலனாய்வு முகமையின் மீது தன்னிச்சையான மற்றும் தடையற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது. இது மற்ற அனைத்து விசாரணை நிறுவனங்களையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் ,அந்த சட்டம் தற்போது முற்றிலும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதனால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று கூறி வருகிறேன்" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!