'மனதில் உள்ளதைப் பேசியதால் உயர்ந்து நிற்கிறார்' - முதல்வர் ஸ்டாலினுக்கு பி.சி.ஸ்ரீராம் பாராட்டு!

'மனதில் உள்ளதைப் பேசியதால் உயர்ந்து நிற்கிறார்' - முதல்வர் ஸ்டாலினுக்கு பி.சி.ஸ்ரீராம் பாராட்டு!

மனதில் உள்ளதை பொதுவெளியில் வெளிப்படையாக பேசியதால் முதல்வர் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் என திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"பொதுவெளியில் மனதில் உள்ளதைப் பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று அனைவரிடமும் உண்மையைப் பேசியுள்ளார். திறந்த மனதுடன் அச்சமற்ற நிலையில் பேசியது அவரது வலிமையைக் காட்டுகிறது. இதனால் அவர் உயர்ந்து நிற்கிறார்" என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுகவின் பொதுக்குழுவில் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கவனத்துடன், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in