என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன்- பவன் கல்யாண் அதிரடி

ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண்
ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், தெலுங்கு தேசம் கட்சி இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் உடன் பயணிக்க இருப்பதாகவும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”தெலுங்கு தேசம் கட்சி மிகவும் வலுவான கட்சி. ஆந்திர பிரதேசத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி, சிறந்த மேலாண்மை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. தற்போதைய சூழலில் தெலுங்கு தேசம் கட்சி சிக்கலில் உள்ளது. இந்த இக்கட்டான நிலையில் நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். ஜனசேனாவின் இளைய ரத்தம், தெலுங்கு தேசம் கட்சிக்கு இந்த சூழலில் மிகவும் அவசியமானதாகும். தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் ஒன்றாக இணைந்தால் மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மூழ்கி விடும்” என தெரிவித்தார்.

ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண்
ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை கடந்த செப்டம்பர் 14ம் தேதி பவன் கல்யாண் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது அக்கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்திருந்தார். முன்னதாக ஜூலை 18ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்று இருந்த அவர், பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு வலு சேர்க்க கூட்டணியில் இணைந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் ஜனசேனா ஆகியவை இணைந்து, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக பாஜக எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in