பசும்பொன் தேவர் குருபூஜை: முதல்வர் ஸ்டாலின் பயணம் திடீர் ரத்து

பசும்பொன் தேவர் குருபூஜை: முதல்வர் ஸ்டாலின் பயணம் திடீர் ரத்து

பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவ முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், அவர் வீடு திரும்பினார். முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் கிராமம் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பசும்பொன்னில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in