பாரிவேந்தரின் பாஜக பாசம்... அலறும் ஐஜேகே வட்டாரம்!

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆனவர் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பாரிவேந்தர். இன்று வரை அவர் திமுக எம்பி-யாகவே தொடர்ந்தாலும் எதிலும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதில்லை.

தமிழகத்துக்கு வெளியிலும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் வேந்தருக்கு பாஜகவின் தயவு தேவைப்படுவதால் பாஜக ஆதரவாளராகவே இருந்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மாறாக பல விவகாரங்களிலும் பாஜகவுக்கு  அதீதமாக அவர் ஆதரவளிப்பது வேந்தர் ஆதரவாளர்களுக்கே கடுப்பை  கிளப்பியிருக்கிறது. 

தனது புதிய தலைமுறை சேனலில் செய்தியாளருக்கும்,  பாஜக தலைவர் அண்ணாமலைக்கும்  ஏற்பட்ட வாக்குவாதத்தில்  “அண்ணாமலையின் செயல் சரிதான்” என்று வெளிப்படையாக கூறிய வேந்தர், அந்தச் செய்தியாளரை கடிந்து கொண்டார்.  அதையெல்லாம் விட தற்போது எழுந்திருக்கும் தமிழ்நாடு பெயர் விவகாரத்திலும், “தமிழகம் என்பதுதான் சரி,  தமிழ்நாடு என்பது பிரிவினைவாதிகளின் சொல்” என்று  பேசி ஐஜேகே வட்டாரத்துக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் வேந்தர். இதற்கெல்லாம் மக்கள் மன்றத்தில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பதறிக்கொண்டிருக்கிறது பாரிவேந்தர் முகாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in