பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளைக் கேட்போம்... பாரிவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு!

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் தான் போட்டியிடுவோம் என்று ஐ.ஜே.கே நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில்  இருந்த அதிமுக  அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. இதனால் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் சேர்ந்துள்ளது. கூட்டணியில் இருந்த  மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் தங்களது கட்சி நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.  இதுகுறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக கூட்டணியில்தான் தாங்கள் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், "நான் அடிப்படையில் ஒரு தேசியவாதி. எங்கள் கட்சியின் பெயரைக்கூட இந்திய ஜனநாயக கட்சி என வைத்துள்ளேன்.  தற்போது பாஜக கூட்டணியில் தான் உள்ளோம். வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் தான் போட்டியிடுவோம்.

வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுப் பெறுவோம்.  பெரம்பலூர் தொகுதியில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தால் 50 ஆண்டுகால கனவுத் திட்டமான ரயில்வே வழித்தடத்தை கொண்டு வருவேன்.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

தமிழ்நாட்டில் தங்களாலும் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக உழைத்து கொண்டிருக்கிறது. மக்கள் சரியான நீதியளிப்பார்கள். மோடி இன்னும் 2 முறை தொடர்ந்து பிரதமராக இருப்பார். காந்திக்கு அடுத்ததாக நாட்டுப்பற்றும், தியாக மனப்பான்மையும் கொண்டவராக மோடி உள்ளார்" எனறார் பாரிவேந்தர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in