திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்

திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்
எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துடன் திமுகவில் இணைந்த பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர்

அதிமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவில் இணைத்துவரும் தற்போதைய வழக்கத்தின்படி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரையும் திமுகவில் ஐக்கியமாக்கி இருக்கின்றனர் அந்தப்பகுதி திமுக பொறுப்பாளர்கள்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெரும்பாலான இடங்களை திமுகவே கைப்பற்றியது. ஆனால் அதிமுக ஆட்சியின்போது நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட சரிசமமான இடங்களை அதிமுகவும், திமுகவும் பெற்றிருந்தன. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு அதிமுகவினர் வசமிருக்கும் ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றை தங்கள் வசம் கொண்டு வரும் முயற்சியில் திமுகவினர் மிக மும்முரமாக இயங்கி வருகின்றனர்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பதவியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுகவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டனர். அந்த வகையில் இன்று பரங்கிப்பேட்டை அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, மற்றும் துணைப் பெருந்தலைவர் மோகனசுந்தரம் ஆகியோரை வெற்றிகரமாக தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட்டனர் அப்பகுதி திமுக பொறுப்பாளர்கள்.

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.ஆர்.கே.கல்லூரி நிர்வாகி கதிரவன் முன்னிலையில் கருணாநிதி, மோகனசுந்தரம் ஆகியோரோடு ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிதுரையும் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

ஏற்கெனவே ஒரு அதிமுக உறுப்பினரை திமுகவினர் தங்கள் வசம் கொண்டு வந்திருந்தனர். தற்போது தலைவர், துணைத் தலைவர் உட்பட மேலும் மூன்று பேர் வந்துவிட்ட நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் உறுப்பினர் கடத்தல் என்று எதுவும் செய்யாமலே பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி திமுக வசம் வந்து சேர்ந்துவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in