பொறுத்திருந்து பாருங்கள், அதிமுகவில் விரைவில் மாற்றம் வரும்: சொல்கிறார் ஓபிஎஸ்

பொறுத்திருந்து பாருங்கள், அதிமுகவில் விரைவில் மாற்றம் வரும்: சொல்கிறார் ஓபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்குச் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று அதிமுக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஒற்றைத் தலைமை களேபரங்களால் அதிமுக இரண்டாகப் பிளவுற்ற நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தார். பிளவு பட்ட அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பொதுவெளியில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா அடிக்கடி பேசிவருகிறார். மேலும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஓ. பன்னீர் செல்வம் நேற்று நியமித்திருந்தார். ஒபிஎஸ் அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி பண்ருட்டி ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் நல்ல கருத்துகளை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்து வருகிறார். அதிமுக உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை பற்றி அவர் பொதுமக்களிடம் பேசுவது தனித்துவம் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள், அதிமுகவில் விரைவில் மாற்றம் வரும் “ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in