`தீர்ப்பால் வானத்துக்கும், பூமிக்கும் ஈபிஎஸ் குதிக்கிறார்; துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை'- டி.டி.வி.தினகரன் ஆவேசம்

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்`வானத்துக்கும், பூமிக்கும் ஈபிஎஸ் குதிக்கிறார்; துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை'- டி.டி.வி.தினகரன் ஆவேசம்

``எனது பெயரை கூட உச்சரிக்கத்தெரியாமல் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர் தான் பழனிசாமி'' என டி.டி.வி.தினகரன் பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அமமுக சார்பில் தேனியில் நேற்றிரவு நடந்தது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``கருணாநிதிக்கு எதிராகவே அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால் இன்று, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தான் பழனிசாமி அரசியல் செய்து வருகிறார். இதனால் தான் திமுக வென்று ஆட்சியில் அமர்ந்துவிட்டது.

தேர்தல் நேர வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல், கடும் எதிர்ப்புகளை மீறி மக்கள் வரிப்பணத்தில் பேனா சின்னம் வைக்க முயற்சித்து கொண்டிருக்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து வானத்திற்கும், பூமிக்கும் பழனிசாமி குதிக்கிறார். இது அவருக்கு கிடைத்த தற்காலிக வெற்றி தான். துரோகம் இழைத்தோர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

எனது பெயரை கூட உச்சரிக்கத் தெரியாமல் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பழனிசாமி, அதிமுகவில் இன்று என்னை சேர்க்க மாட்டேன் என கூறி வருகிறார். ஒரு கட்சியை நடத்தி வரும் நான் எதற்கு அங்கு செல்லப்போகிறேன். துரோகிகளின் கையில் சிக்கி இன்று சின்னாபின்னமாகியுள்ள இரட்டை இலை சின்னத்தை ஜனநாயக முறையில் மீட்டெடுப்போம்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in