`திராவிடத்தை காப்போம்'- புதிய கட்சியைத் தொடங்கிய பழ.கருப்பையா அழைப்பு!

`திராவிடத்தை காப்போம்'- புதிய கட்சியைத் தொடங்கிய பழ.கருப்பையா அழைப்பு!

காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா புதிய கட்சித் தொடங்கியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் பழ.கருப்பையா. காமராஜர் மறைவுக்கு பிறகு அந்தக் கட்சியில் இருந்து விலகி, ஜனதா கட்சியில் சேந்தார். பின்னர் ஜனதா தள் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். இதையடுத்து, அந்த கட்சியில் இருந்து விலகி, பின்னர் திமுக, அதிமுக கட்சியில் ஐக்கியமானார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதன் பின்னர் அதிமுகவிலிருந்து பழ.கருப்பையாவை அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. இதையடுத்து கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். சில மாதங்கள் அந்த கட்சியில் இருந்த பழ.கருப்பையா அதன்பின் விலகினார்.

இந்த நிலையில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார் பழ.கருப்பையா. `தமிழர் தன்னுரிமை கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள பழ.கருப்பையா, "திராவிடத்தை காக்க, தமிழைக் காக்க, தமிழர் நலனை காக்க, சுரண்டல் அற்ற சமுதாயத்தை உருவாக்க சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள்" என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in