பாகிஸ்தானின் கையில் வளையல் இல்லை; அணுகுண்டு வைத்திருக்கிறார்கள்... பகீர் கிளப்பும் பரூக் அப்துல்லா!

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, “பாகிஸ்தான் இதை அமைதியாக வேடிக்கை பார்க்காது. நம் மீது அணுகுண்டுகள் விழும்” என்று அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், “ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. அது நம்முடனே இருக்கும். இந்தியாவின் சக்தி அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருகிறது. அதோடு, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு உள்ள நமது சகோதர சகோதரிகள் தாங்களாகவே இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள்" என்று பேசினார்

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்கின் கருத்து குறித்து கருத்து கேட்டதற்கு, பரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாதுகாப்பு அமைச்சர் அதைச் சொல்கிறார் என்றால், அவர் மேல் நடவடிக்கை எடுக்கலாமே. அவர்களை யார் தடுத்து நிறுத்தப்போகிறார்கள்?. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பாகிஸ்தான் வளையல் அணியவில்லை. அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, அந்த அணுகுண்டு நம் மீது விழும்" என்று கூறியுள்ளார்

பரூக் அப்துல்லாவின் கருத்தை விமர்சித்துள்ள பாஜக, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாகிஸ்தானின் மொழியில் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளது.

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா

இதுபற்றி பேசிய பாஜக தலைவர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், “இந்தியா கூட்டணி தலைவர்கள் பாகிஸ்தானின் அபிப்ராயத்தை பேசுகிறார்கள். இதுவரை, பாகிஸ்தானின் சில தீவிரவாதத் தலைவர்கள் தங்களிடம் அணுகுண்டு இருப்பதாகக் கூறினர். ஆனால், தற்போது, இந்தியா கூட்டணியின் மூத்த தலைவரும், முன்னணி தலைவருமான ஃபரூக் அப்துல்லாவும் அதையே கூறியுள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார்

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in