‘பஞ்சாபில் 3 லட்சம் ஊழல் புகார்கள் வந்துள்ளன’: அதிர்ச்சி கிளப்பும் ஆம் ஆத்மி கட்சி!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அரசின் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது

பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்ட தகவல்களின்படி, மாநிலத்தின் ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைனில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2,500 புகார்கள் பெறப்படுகின்றன என தெரிவித்துள்ள பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி, “ எங்கள் கனவு - ஊழல் இல்லாத பஞ்சாப்” என ட்வீட் செய்துள்ளது.

பகவந்த் மான் தலைமையில் பொறுப்பேற்ற பஞ்சாப் அரசாங்கம், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை மக்கள் அனுப்புவதற்கான ஹெல்லைன் எண்ணை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த ஹெல்ப்லைன் மூலம் பெறப்படும் ஊழல் புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் பீரோ ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in