‘எல்லையில் எதிரிகளிடம் பலத்தை காட்டாமல், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறோம்’ - ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!

ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நாம் அனைவரும் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற 'சங்க ஷிக்ஷா வர்க்'  எனும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கான பயிற்சி முகாம் பாராட்டு விழாவில் பேசிய ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியா அனைத்து நாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டது. இதனால் இந்த ஆண்டு இந்தியாவுக்கு ஜி 20 தலைமைப் பதவி கிடைத்துள்ளது. இந்த பெருமையை நாம் உணர வேண்டும்.

நமது சமூகத்தில் மதம் தொடர்பான பல பிளவுகள் உள்ளன. எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம். நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நாம் அனைவரும் அவற்றைச் சரிசெய்ய வேண்டும்" என்று கூறினார்.

மேலும், “சில மதங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தவை, நாம் அவர்களுடன் போர் செய்தோம். ஆனால் வெளியாட்கள் போய்விட்டார்கள். இப்போது எல்லாரும் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். இன்னும் இங்கே வெளியாட்களின் தாக்கத்தில் உள்ளவர்கள் நம்மவர்களே. இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் சிந்தனையில் ஏதேனும் குறை இருந்தால் அவர்களை சீர்திருத்த வேண்டியது நமது பொறுப்பு. வெளியாட்கள் சென்றுவிட்டனர், ஆனால் இஸ்லாத்தின் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இங்கு பாதுகாப்பாக உள்ளது.

கடந்த காலத்தில் இந்தியாவில் ஜாதி பாகுபாடு இல்லை என்ற கருத்தை சிலர் ஆதரிக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் சாதி அமைப்பின் காரணமாக அநீதி நடந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் நமது மூதாதையர்களின் மகிமையை சுமக்கிறோம். ஆனால் அவர்களின் கடன்களை நாம் திருப்பிச் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in