`இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே எங்கள் ஆதரவு'- ஓபிஎஸ் அணி அறிவிப்பு

ஓபிஎஸ் அணி செய்தியாளர் சந்திப்பு
ஓபிஎஸ் அணி செய்தியாளர் சந்திப்புஇரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே எங்கள் ஆதரவு - வைத்தியலிங்கம்

’’பொதுக்குழு முடிவுக்கு பின் வேட்பாளர் இறுதிச் செய்யப்படுவார்கள். அதேநேரம் இரட்டை இலைச் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்களை நாங்கள் ஆதரிப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது’’ என ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, ‘’ இரு அணிக்களுக்கு பிரச்சினை என வரும் போது உச்சநீதிமன்றம் ஆணையரை நியமிப்பது வழக்கம். அது போலத்தான் தமிழ்மகன் உசேனை நியமித்துள்ளது. அவரை நியமித்ததாலேயே அவர்களுக்கு வெற்றி என கூற முடியாது, எங்களது கோரிக்கையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் இல்லை என்பதையும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலவதியாகிவிட்டது என்பதையும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்கிறார் என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஈபிஎஸ் தரப்பால் அறிவிக்கப்பட்ட தென்னரசு தான் வேட்பாளாரா? என்பது எங்களுக்கு தெரியாது. தற்போது வரை ஒப்புதல் படிவம் கிடைக்கவில்லை. பொதுக்குழு முடிவுக்கு பின்னரே வேட்பாளர் இறுதிச் செய்யப்படுவார்.

இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இணைந்து ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் வெற்றிப் பெற நாங்கள் பாடுபடுவோம்’’ என தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in