ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்: திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்: திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்த செந்தில் முருகன் தனது வேட்புமனு திரும்பப் பெறுவார் என்றும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளோம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ‘’எங்களுடைய நோக்கமே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடக்கூடாது, அது தோல்வியை தழுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம்.

நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிப் பெற்றக்காரணத்தால், இரட்டை இலைக்கு ஆதரவாக எங்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் விலகுகிறார். இரட்டை இலையை வெற்றிப் பெற வைக்க வேண்டும் என்பதற்காக அவர் விலகுகிறார். தென்னரசுக்காக நாங்கள் விலகவில்லை. இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் கேட்க உள்ளோம்’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in