`நமது நம்பிக்கை வெற்றி பெறும்'

முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி ட்வீட்
`நமது நம்பிக்கை வெற்றி பெறும்'
முதல்வர் ஸ்டாலினுடன் ராகுல் காந்திHindu கோப்பு படம்

தமிழ்நாடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசியதற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்ததற்கு ராகுல் காந்தியும் நன்றி தெரிவித்துள்ளார்.

"நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது" என்று மக்ளவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியது தமிழகத்தை அதிரவைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி
முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்திhindu கோப்பு படம்

இதனிடையே, ராகுல் காந்தியின் மக்களவை உரைக்கு நன்றி தெரிவித்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்ததற்கு ராகுல் காந்தியும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே. தமிழர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து மாநில மக்களும் எனது சகோதர, சகோதரிகள். இந்தியாவின் பன்முனத்தன்மை, கூட்டாட்சி மீதான நமது நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in