‘ஓபிஎஸ்-க்கு வேற வேலை இல்லை’ -சீண்டும் ஓ.எஸ்.மணியன்!

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் நீதிமன்ற முயற்சிகள் தொடர்பாக, ‘ஓபிஎஸ்-க்கு வேற வேலை இல்லை’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலட்சியம் காட்டியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்டது முதல் எடப்பாடி தரப்புக்கான நீதிமன்ற தீர்ப்பு வரை, ஈபிஎஸ் பக்கம் அரசியல் காற்று அதிகம் அடித்து வருகிறது. மறுபக்கம் ஓபிஎஸ் நிரதரவாகி உள்ளார். எனவே தனது தரப்பை வலுப்படுத்திக்கொள்ள மீண்டும் சட்டப்போரினை ஓபிஎஸ் தொடங்குகிறார். ஆனால், எடப்பாடி தரப்பிலானவர்கள் ஓபிஎஸ் நகர்வுகளை அலட்சியம் செய்கின்றனர். அதனை பிரதிபலிக்கும் வகையில் ஓ.எஸ்.மணியன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏ-வுமான ஓ.எஸ்.மணியன், “ஓபிஎஸ்-க்கு வேறு வேலையில்லை. பெயர் வெளியில் வருவதற்காக எதையாவது செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் அதற்கான பணமும் இருப்பதால் அவற்றை செலவழிப்பதற்காக கோர்ட்டுக்கு போகிறார்” என்று தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாவட்ட செயலர்களை சந்திக்க இருப்பதன் மத்தியில் ஓ.எஸ்.மணியன், ஓபிஎஸ் குறித்தான இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக - பாஜக இடையே நீடிக்கும் உரசல் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஓ.எஸ்.மணியன், “பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு அது பெரிய விஷயமில்லை” என்று புறந்தள்ளினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in