`வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு'- முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

இன்று நடைபெற இருப்பது வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த பிறகு அக்கட்சியில் தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இரட்டைத் தலைமையில் ஒருவரான ஓபிஎஸ் கட்சியில் தன்னுடைய செல்வாக்கை இழந்து வருகிறார். இந்த நிலையில் அதிமுகவினர் பெரும்பான்மையானவர்கள் ஈபிஎஸ் பக்கமே இணைந்து இருக்கிறார்கள்.

அதனால் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் கூட புதிய எழுச்சியுடன் பொதுக்குழுவை நடத்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவெடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை 9:15 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வானகரம் திருமண மண்டபத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுவாக ஒரு கூட்டம் நடக்கும் போது அது வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் என்று சொல்வதுண்டு. ஆனால் இங்கு நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாகும். தொண்டர்களின் விருப்பப்படி இன்று அனைத்தும் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in