பேசிக்கொண்டிருந்த ஓபிஎஸ்; எதிர்ப்பு தெரிவித்த ஈபிஎஸ்; சபாநாயகர் காட்டிய அதிரடி

ஓபிஎஸ்- ஈபிஎஸ்
ஓபிஎஸ்- ஈபிஎஸ்பேசிக்கொண்டிருந்த ஓபிஎஸ்; எதிர்ப்பு தெரிவித்த ஈபிஎஸ்; சபாநாயகர் காட்டிய அதிரடி

ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக ஓபிஎஸ் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக சபாநாயகர் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் தடை சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொண்டு வந்தார். இதன்பின் ஒவ்வொரு கட்சி சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது, ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாகவும் விவாதமின்றி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கலாம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதற்கு ஈபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிய நிலையில் ஓபிஎஸ்ஸை பேச எப்படி அனுமதிக்கலாம் என்றும் கட்சிக்கு ஒருவர் என்று சொல்லிவிட்டு ஏன் மற்றொருவரை பேச அனுமதித்தீர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "முக்கியமான மசோதா என்பதால் முன்னாள் முதல்வர் என்ற முறையில் பேச வாய்ப்பு அளித்தோம். வேறு நோக்கம் கற்பிக்க வேண்டாம். அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் அமர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in