சி.வி.சண்முகம் செயலால் ஓபிஎஸ் வெளிநடப்பு: களேபரத்துடன் முடிந்தது அதிமுக பொதுக்குழு

அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்
சி.வி.சண்முகம் செயலால் ஓபிஎஸ் வெளிநடப்பு: களேபரத்துடன் முடிந்தது அதிமுக பொதுக்குழு

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிவித்தார். ஆனால், ஓபிஎஸ் மவுனமாகவே இருந்தார். சி.வி.சண்முகம் படித்த கடிதத்தால் கொந்தளித்த ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திடீரென எழும்பிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 23 தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து, கே.பி.முனுசாமி பேசினார். அவரும் 23 தீர்மானங்களை இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக தெரிவித்தார்.

இதன் பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்காலிகமாக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து, சால்வை, பூங்கொத்து கொடுத்து தமிழ் மகன் உசேனுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஈபிஎஸ். ஆனால் அருகில் இருந்த ஓபிஎஸ் கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து, மைக்கை பிடித்த சி.வி.சண்முகம், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கையெழுத்திட்டிருப்பதாக கடிதத்தை படித்தார்.

பின்னர் இதை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கொடுத்தார். இதையடுத்து பேசிய அவைத் தலைவர், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதியை இன்றே அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதன்படி ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, மேடையில் இருந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.பிரபாகர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது, மைக்கை பிடித்த வைத்திலிங்கம், சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் பொதுக்குழு தேதி அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் கொந்தளிப்புடன் கூறிவிட்டு சென்றார். இதன் பின்னர், வெளியே சென்ற வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவை அழிக்க சதி நடக்கிறது என்று கூறிவிட்டுச் சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in