‘பதவி ஆசையில் மிதப்பவர்கள் அற்ப காரியங்களைச் செய்வார்கள்’ - பெரியாரின் வாசகத்துடன் ஓபிஎஸ் ட்வீட்

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் அற்ப காரியங்களை செய்து வெற்றிபெற பார்ப்பார்கள் என்று பெரியாரின் வாசகத்தை மேற்கோள் காட்டி ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.

பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “ பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றிபெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப்பற்றோ சிறிதளவும் காண முடியாது” என பெரியாரின் வாசகத்தை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வெடித்த மோதலுக்கு பின்னர், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தனர். இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று ஓபிஎஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in