6 பேர் விடுதலை - அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ் மகிழ்ச்சி

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி உட்பட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனை தொடர்ந்து, சுரேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் ஜெயலலிதா அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அஇஅதிமுக இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in