`கசாப்புக்கடைக்காரரை நம்பிப்போன ஆட்டுக்கு என்ன நடக்குமோ, அதுதான் நடந்துள்ளது'- கிண்டல் செய்த ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்`கசாப்புக்கடைக்காரரை நம்பிப்போன ஆட்டுக்கு என்ன நடக்குமோ, அதுதான் நடந்துள்ளது...

’’ கசாப்புக்கடைக்காரரை நம்பி போன ஆட்டுக்கு என்ன நடக்குமோ அது தான் ஓபிஎஸ்ஸை நம்பிப் போனவர்களுக்கு நடந்துள்ளது. இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் நினைத்தார் அது நடக்கவில்லை என்றதும் இரட்டை இலைக்கு ஆதரவு என நாடகம் ஆடுகிறார்’’ என ஓபிஎஸ்ஸை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுபடுவதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை இன்று சந்தித்து புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றன. அதனை ஆதாரத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப பெற்றது என்பது கசாப்பு கடைக்காரரை நம்பி ஆடுகள் சென்றால் என்னவாகும் அதுத்தான் தற்போது நடந்துள்ளது. இரட்டை இலைக்காக வாபஸ் எனக் கூறுவது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல உள்ளது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் எப்படி சந்திப்பு நடைபெறும் அதற்கான வாய்ப்பே இல்லை.

இரட்டை இலையை முடக்க முடியவில்லை என்பதால் இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். திமுகவின் பி டீம்மாக ஓபிஎஸ் செயல்பட்டு இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை. எங்கள் தரப்பிற்கு இரட்டை இலைக் கிடைத்தது ஒன்றரைக்கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதனால் நாங்கள் நிச்சயமாக வெற்றிப் பெறுவோம்.

ஓபிஎஸ் முரண்பாட்டுடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். செங்கோட்டையன் ஓபிஎஸ்ஸுக்கு நன்றி தெரிவித்தது அவரது தனிப்பட்டக் கருத்து. நான் கூறுவது கட்சியின் கருத்து. ஜனநாயக அத்துமீறல்களை எல்லாம் மீறி நாங்கள் வெற்றிப் பெறுவோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த இடைத்தேர்தலுக்காக மட்டுமே. திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் ஓபிஎஸ்ஸை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’’ என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in