ஈரோடு இடைத்தேர்தல்; தனது வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் பெற வேண்டும்: அண்ணாமலை திடீர் கோரிக்கை

சென்னையில் அண்ணாமலை பேட்டி
சென்னையில் அண்ணாமலை பேட்டிஈரோடு இடைத்தேர்தல்; தனது வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் பெற வேண்டும்: அண்ணாமலை திடீர் கோரிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் வலுவான ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், ஏற்கெனவெ போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்து தற்போது ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக களம்காண இருக்கும் தென்னரசுவை ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே கூட்டணி தர்மத்தின் படி இந்த தேர்தலைப் பாஜக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். திமுகவின் பணபலம் உள்ளிட்ட அசுர பலத்தை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்தப் பதிலின் அடிப்படையில் பார்க்கும் போது வேட்பாளருக்கு சின்னம் கிடைப்பதில் கூட கஷ்டமாக இருக்கும் என்பது தான் பாஜகவின் கருத்தாக இருந்தது.

கூட்டணித் தர்மத்தை காக்க அதிமுக போட்டியிட வேண்டும். அதிலும் வலுவான ஒரு வேட்பாளர் நிற்க வேண்டுமென கடந்த 8 நாட்களாக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்தார், அவர் அறிவித்தவுடன் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்துவிட்டார். ஆனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், வலுவான வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் துளியும் மாற்றம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தோம். அதனால் தான் அகில இந்திய தலைவர் நட்டா அறிவுறுத்தலின்படி தேசிய பொதுச்செயலாளர் ரவி உட்பட நாங்கள் இருவரையும் சந்தித்து பேசினோம்.

கட்சியின் நலனுக்காக தமிழக மக்களின் நலனுக்காக ஓபிஎஸ்சிடம் இணைந்து பணியாற்ற கோரிக்கை வைத்தோம். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அவரும் கையெழுத்த போடத் தயார். ஆனால், சில நிபந்தனைகளை வைத்தார். ஒரு வலுவான வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தும் இல்லை.

ஏற்கெனவே மக்கள் பிரதிநிதியாக இருந்த ஈபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும். தனது வேட்பாளரை அவர் வாபஸ் பெற வேண்டும். அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிட்டது இல்லை. தலையிடவும் போவதில்லை. நல்ல முடிவை ஓபிஎஸ் அறிவிப்பார் என நினைக்கிறோம். எங்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வேண்டும்’’ என அண்ணாமலை தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in