ஜனவரி 6-ம் தேதி கோவையில் மாநாடு! ஈபிஎஸ் அணியை தெறிக்கவிடுமா ஓபிஎஸ் அணி?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஜனவரி 6-ம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில்,  மற்றொரு அணியாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார்.

சட்டப்பேரவையிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக செயல்படுகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இரு அணியினர் கூட்டணி விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. 52-வது தொடக்க நாளை மையமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுகிறது. 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நாங்கள்தான் அதிமுக, இரட்டை இலை வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து பேசவில்லை என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in