அண்ணாமலைக்கு எதிராக ஓபிஎஸ் முகாம் தீர்மானம்!

அண்ணாமலையுடன் ஓபிஎஸ்
அண்ணாமலையுடன் ஓபிஎஸ்

பாஜகவை நம்பி கம்பீரமாக இடைத் தேர்தல் களத்துக்கு வந்த ஓபிஎஸ், இப்போது வந்த சுவடு தெரியாமல் இருக்கிறார். நம்பியவரும் நட்டாற்றில் விட்டுவிட்டு ராவண தேசம் போய்விட்டார். தேர்தல் போட்டியிலிருந்து விலகியதற்கு ஓபிஎஸ் ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும் அவரது விசுவாச வட்டம் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. “இனிமேல் இவரை நம்பினால் நமது அரசியல் எதிர்காலமும் அஸ்தமனமாகிவிடுமோ என்ற கவலை, ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் சீனியர்களுக்கே இப்போது வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்களோ, தேரை இழுத்து தெருவில் நிறுத்திவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

அந்தக் கடுப்பானது அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானம் போடுமளவுக்குப் போய்விட்டது. கடந்த 9-ம் தேதி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அந்த அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் போட்டிருக்கிறார்கள்.  

இந்த கூட்டத்தில், ஓபிஎஸ்ஸை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவமதிப்பதைச் சுட்டிக்காடி தீர்மானம்  நிறைவேற்றி இருக்கிறார்கள்.  அதிமுக - பாஜக நல்லுறவில் அண்ணாமலை விஷத்தை கலப்பதாகவும் கூட்டத்திலிருந்தவர்கள் கொந்தளித்திருக்கிறார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸை முதலில் வந்து சந்திப்பதை விட்டுவிட்டு ஈபிஎஸ்ஸை அண்ணாமலை சந்தித்த விதத்தையும் கூட்டத்தில் கண்டித்துப் பேசி இருக்கிறார்கள். இத்தனையையும் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறது ஈபிஎஸ் டீம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in