ராயப்பேட்டாவுக்கு கேட்... டெல்லியாவது திறக்குமா?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

திமுகவுக்கு போட்டியாக டெல்லி ஷோகேத் பகுதியில் அதிமுகவுக்கும் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. தளவாய் சுந்தரம் மேற்பார்வையில் கட்டப்பட்டு வரும் இந்த அலுவலகத்தில், ஜெயலலிதா பயன்படுத்தி வந்த பொருட்களைக் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். ராஜ்யசபா எம்பி-யாக இருந்த போது டெல்லி பயணத்திற்காக ஜெயலலிதா பயன்படுத்திய ‘மாருதி 800’ காரும் அதில் இடம்பெறுமாம். தற்போது ராஜ்யசபா எம்பி-யாக இருக்கும் தம்பிதுரை வசம் இருக்கும் மாருதி காரையும், டெல்லி அதிமுக அலுவலகத்தையும் கைப்பற்ற ஓபிஎஸ் கணக்குப் போடுகிறாராம். அதேசமயம், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துவிட்டால் டெல்லி அலுவலகம் தங்கள் கைக்கு வருவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என எண்ணியதாம் ஈபிஎஸ் தரப்பு. அவர்கள் எதிர்பார்த்தபடியே தீர்ப்பு வந்துவிட்டதால் ஆனந்தக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை, ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானாலும் அதிமுகவுக்கென இருக்கும் ஒரே மக்களவை உறுப்பினர் தனது மகன் ரவீந்திரநாத் குமார் தான் என்பதால் அந்த டிரம்கார்டை வைத்து டெல்லி அலுவலகத்தில் என்டர் ஆகமுடியுமா என சட்டப்புள்ளிகளிடம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருக்கிறாராம் ஓபிஎஸ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in