குஜராத்திற்கு ஓபிஎஸ் திடீர் பயணம்: யாரைச் சந்திக்கப் போகிறார்?

குஜராத்திற்கு ஓபிஎஸ் திடீர் பயணம்: யாரைச் சந்திக்கப் போகிறார்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்பிற்கு மத்தியில் திடீரென ஓ.பன்னீர்செல்வம் குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் குஜராத்தில் பாஜக முக்கிய நிர்வாகியை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று அறிவித்தார். அதேபோல, அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. இதற்காக ஈபிஎஸ் தரப்பினர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரி வருகின்றனர். அதிமுக போட்டியிட தமாகா, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டன.

இதே போல அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், திடீரென குஜராத் மாநிலம் ஐதராபாத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். ஐதராபாத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடப்பதன் காரணமாக குஜராத்திற்கு ஓபிஎஸ் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றுள்ளனர்.

மேலும் குஜராத்தில் பாஜக முக்கிய நிர்வாகியைச் சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in