இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள இயக்குநர் பாரதிராஜாவை, ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரபல இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார். அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in