
``கதையில் வில்லன் ஜெயிக்கிற மாதிரி இருக்கும். ஆனால் ஒரே அடியில் வில்லனின் நிலை என்னாகும் என்றும் எல்லோருக்கும் தெரியும்'' என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கொடி, கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை வந்த ஓபிஎஸ்ஸுடன் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், ‘’கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைபாடு. தேர்தல் நெருங்கும் போது சசிகலாவை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார். அதில் தப்பும் இல்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி வேட்டி கட்டுவது உரிமை , அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கார்களில் கொடி பயன்படுத்தவில்லை. அவ்வளவுதான்'' ' என்றார்.
வழக்குகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது குறித்த கேள்விக்கு, ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டே இருப்பதை போல் தான் இருக்கும். கடைசியில் ஹீரோ ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார் அதுபோல தான் நடக்கும் ‘’ என்றார் வைத்தி லிங்கம்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!