ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் ஓட்டுநர் மாயம்: 50 லட்சம் பணம் எங்கே?

 பணம்
பணம்

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான நாராயணன் என்பவரின் கார் ஓட்டுனர் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனிமாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த நாராயணன் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வருகிறார். தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளராக இருக்கும் நாராயணன் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர். ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் நெருக்கமானவர். பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இவரது கார் ஓட்டுனராக உள்ளார். நாராயணன் தன் நண்பர் ஒருவரின் 50 லட்சம் பணத்துடன் காரில் வந்து கொண்டிருந்தார்.

காரை அவரது டிரைவர் ஸ்ரீதர் ஓட்டிவந்தார். வழியில் அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகான் காரில் ஏறிய நாராயணன், தனது வீட்டில் 50 லட்சம் ரூபாயையும் ஒப்படைத்துவிடும்படி சொல்லியிருக்கிறார். ஆனால் ஸ்ரீதர் பணத்தை வீட்டில் ஒப்படைக்கவில்லை. அதேநேரம் ஸ்ரீதரையும் அதன்பின் காணவில்லை. ஸ்ரீதரைக் காணாமல் அதிர்ச்சியடைந்த நாராயணன் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார்.

இதேபோல் ஸ்ரீதரின் மனைவி செங்கம்மாளும் தன் கணவரை காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தேனி மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in