`பாடை கட்ட தயாராக இருக்கிறோம்'- ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது!

`பாடை கட்ட தயாராக இருக்கிறோம்'- ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது!

அதிமுக பிரமுகர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் பழைய சம்பவங்களை மறந்து ஒருங்கிணைந்து திமுகவை எதிர்க்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும் ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஓபிஎஸ் தலைமை பதவி ஏற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் பேசியிருந்தார். இதையடுத்து ஆர்.பி.உதயகுமாரிடம் தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவணபாண்டியன் என்பவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, ‘பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காகத் தென்காசி மாவட்டத்திற்கு எப்போது வருவீர்கள்? ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளீர்கள் . எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்குப் பாடை கட்ட தயாராக இருக்கிறோம்’ என மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணபாண்டியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in