சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இருக்கை விவகாரம்: சபாநாயகர் அப்பாவு தந்த அதிரடி பதில்

சபாநாயகர் அப்பாவு.
சபாநாயகர் அப்பாவு.சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இருக்கை விவகாரம்: சபாநாயகர் அப்பாவு தந்த அதிரடி பதில்

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும். அதிமுக விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி தமிழக சபாநாயகர் அப்பாவு அணையில் இன்று திறந்து வைத்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நாங்குநேரி, கருவேலங்குளம், மீனவன்குளம் உள்ளிட்ட 15 கிராம விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொதி வரும் பருவத்தில் உள்ள நெற்பயிரைக் காப்பாற்ற மார்ச் 31-ம் தேதி வரை தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும்" என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழு தீர்மானப்படி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதை செல்லும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் அதிமுகவின் உறுப்பினராக இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், " அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவையை நடத்துவது பேரவை தலைவரின் முழு பொறுப்பு. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை" அவர் என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in