சசிகலாவுடன் இணைந்து அரசியல் பயணமா?: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக தேனி பெரியகுளத்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ன நோக்கத்திற்காக அதிமுகவை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்களோ அந்த எண்ணம் உறுதியாக நிறைவேறும்" என்றார்‌.

உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? சசிகலாவுடன் இணைந்து பயணிக்க போவதாக தகவல்கள் வருகிறதே? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் எழுப்பினர், அதற்கெல்லாம், "தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்" என்று சுருக்கமாக பதிலளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in