ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ராமதாஸ், திருமாவளவன், டி.டி.வி.தினகரன், சீமான் இரங்கல்

ஓபிஎஸ் தாயார்
ஓபிஎஸ் தாயார் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ராமதாஸ், திருமாவளவன், டி.டி.வி.தினகரன், சீமான் இரங்கல்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமானதையறிந்து வேதனையடைந்தேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், "முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அருமை தாயார் காலமானார் என்பதையறிந்து வருந்துகிறேன். தாயாரை இழந்து வாடும் ஓபிஎஸ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாயார் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து அவரை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்தியதை அறிந்து வேதனையடைந்தேன். பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கூறியுள்ளார்.

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்புத்தாயார் அம்மா பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து பெருந்துயரில் வாடும், ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அம்மையார் பழனியம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in