ஓபிஎஸ் தாயார் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

ஓபிஎஸ் - தாயார் பழனியம்மாள் நாச்சியார்
ஓபிஎஸ் - தாயார் பழனியம்மாள் நாச்சியார்ஓபிஎஸ் தாயார் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (96). இவருக்கு கடந்த 23-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார். தாயாரின் மறைவு செய்தியை கேட்டு சென்னையில் இருந்து தேனி விரைந்தார் ஓபிஎஸ். தாயாரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதனிடையே, ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in