`நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை; கடிதமும் செல்லத்தக்கது அல்ல'- ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் காட்டமாக பதில் கடிதம்!

`நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை; கடிதமும் செல்லத்தக்கது அல்ல'- ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் காட்டமாக பதில் கடிதம்!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்திற்கு, எடப்பாடி பழனிச்சாமி காட்டமான பதில் கடிதத்தை அனுப்பி இருக்கிறார். அதில், ``தாங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை என்பதால் இந்த கடிதம் செல்லத்தக்கது அல்ல'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்பாக ஓ. பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தில், ``உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் பி படிவங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான பதில் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

ஈபிஎஸ் அனுப்பிய அந்த கடிதத்தில், “ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 01.12.2022 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்ட திட்டத் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட வில்லை. ஆதலால், அந்த சட்ட திட்டத் திருத்தங்கள் காலாவதியாகிவிட்டன. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் அனுப்பியுள்ள கடிதம் செல்லத்தக்கது அல்ல. உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளான 27-ம் தேதியன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், கடந்த 27-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தை தாங்கள் புறக்கணித்த நிலையில் தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்புடையதாக இல்லை. அதேபோல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் காவல்துறையில் புகார் அளித்தும் அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தீர்கள். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in