`உலகத்திலேயே கூட்டுச் சேர்க்கக் கூடாத பிறவி எடப்பாடி பழனிசாமி! - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

`உலகத்திலேயே கூட்டுச் சேர்க்கக் கூடாத பிறவி எடப்பாடி பழனிசாமி! - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

``அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.  அது எங்களுக்குத் தான் சொந்தம்'' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை இன்று சென்னையில் கூட்டியிருந்த ஓபிஎஸ்,  கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவில் இப்பொழுது நிலவக்கூடிய இந்த சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தமிழக மக்களும் அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் நன்றாக அறிவார்கள். அதிமுக தொண்டர்களை  ஒன்றிணைக்க கூடிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.  தொண்டர்களும்,  பொதுமக்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். நான் பொருளாளராக இருக்கும்பொழுது அளித்த கணக்கைத்தான் தேர்தல் ஆணையம் இப்போது ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. அப்படி உருவானால் எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ அந்த நிலையில் கட்சியை  காப்போம். தமிழகத்தில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி.  ஆகவே எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.  தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்குகின்ற தீர்ப்பின்படி  இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் கிடைக்கும்.

இவரால் மாவட்ட செயலாளராக நியமிக்க முடிவு நியமிக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு தற்போது 88 மாவட்ட செயலாளர்களையும் கழக நிர்வாகிகளையும் நியமித்து உள்ளேன்.  பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவர்கள் செய்யும் தவறை ஒவ்வொரு நாளும் சுட்டி காட்டும் ஒரே இயக்கம் அதிமுக. அதை நான் முறையாக செய்து கொண்டு இருக்கிறேன்.

அடுத்த கட்ட நகர்வுக்கு  இப்போது அவசரம் தேவையில்லை. இறுதிக்கட்ட வெற்றி எங்களுடையது தான். இயக்கத்தை காப்பாற்றியவர்கள் யாராக இருந்தாலும்  அது சசிகலாவாக இருந்தாலும்  அவர்களையும் இணைத்துச் செயல்படுவோம். ஆனால்,  உலகத்திலேயே கூட்டுச் சேர்க்கக்கூடாத பிறவி ஒன்று உண்டெனில் அது எடப்பாடி பழனிசாமி தான். 

கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். யார் இந்த கட்சியை தலைமை ஏற்று நடத்தினார்களோ,  அவர்களுக்குத் தான் தகுதி இருக்கிறது என தொண்டர்கள் முடிவு எடுப்பார்கள். எங்கள் நம்பிக்கை அதிமுகவின்  1.5 கோடி தொண்டர்கள் தான். அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது.  எங்களுக்கு  பாஜக உரிய மரியாதையை தருகிறது. நாங்களும் அவர்களுக்குரிய மரியாதையை தந்து கொண்டுதான் இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அது எங்களுக்குத் தான் சொந்தம்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in