ஓபிஎஸ் உண்மையை சொல்லியிருக்கிறார்: சசிகலா

ஓபிஎஸ் உண்மையை சொல்லியிருக்கிறார்: சசிகலா

"என் மீது மதிப்பு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் உண்மையை சொல்லியிருக்கிறார்" என சசிகலா கூறினார்.

ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம் ஆன்மிக பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கழக தொண்டர்கள் வேண்டுதல் வைத்திருந்ததால் கோயில்களுக்கு சென்றேன். கோயிலுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் அன்புடன் பழகுகின்றனர் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது காலதாமதமாக வந்தாலும் உண்மையை யாரும் மறைக்க முடியாது. திரையிட்டு மறைக்க முடியாது. ஆணையம் விசாரணை நடத்துவது நல்லது என்றே நினைத்தேன். அதேபோன்று தற்போது பொதுமக்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. கடவுளுக்குத் தெரிந்த உண்மை மக்களுக்கு தெரிந்துள்ளது" என்றார்.

சசிகலா மீது மரியாதையும், நன்மதிப்பும் வைத்துள்ளேன் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, என் மீது மதிப்பு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் உண்மையை சொல்லியிருக்கிறார் என்றவர், தொண்டர்கள்தான் அதிமுகவின் ஆணிவேர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்தே சட்டங்களில் அதுதான் சொல்லப்பட்டது. தலைவர் சட்டதிட்ட விதிகளில் அதையே சொல்லியிருக்கிறார். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் கழகத்தில் நடக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in