எம்ஜிஆர் இல்லத்தில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஓபிஎஸ்: ஈபிஎஸ் அணிக்கு பச்சைக்கொடியா?

எம்ஜிஆர் இல்லத்தில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஓபிஎஸ்: ஈபிஎஸ் அணிக்கு பச்சைக்கொடியா?

அதிமுக பொன் விழாவையொட்டி சென்னை உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சமாதானப் புறாவை பறக்கவிட்டு, ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அவர் பச்சைக்கொடி காட்டினாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இணைந்து செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி திடீரென ஒற்றைத் தலைமையை பிரச்சினையால் பிரிந்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். யார் பக்கம் ஆதரவாக செயல்படுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் தொண்டர்கள். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளை மாற்றி அவர் பொதுச் செயலாளராக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஓபிஸ் அணியுடன் எடப்பாடி பழனிசாமி இணைந்து செயல்பட எந்த சாத்திய கூறுகளும் இல்லாத நிலை இருக்கிறது. ஒருவருக்கொருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் இரு தரப்புக்கு இன்னும் அங்கீகாரம் வழங்காமல் இருக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இருவரும் சேர்ந்து அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்கி விடுவார்களோ என்று குமுறுகின்றனர் அதிமுகவினர். இதனிடையே, அதிமுக தொடங்கப்பட்டு 51-வது ஆண்டு நிறைவு விழாவை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பினர் இன்று தனித்தனியாக கொண்டாடினர். ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதேபோல் சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்ற ஓபிஎஸ், அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரகாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளைப்புறாவே அதிமுக நிர்வாகிகள் எடுத்து வந்து ஓ.பன்னீர் செல்வத்திடம் அந்த புறாவை ஓபிஎஸ் பறக்கவிட்டார். அதிமுக 4 அணியாக பிரிந்து கிடக்கும் நிலையில் ஓபிஎஸ் பறக்கவிட்ட சமாதான புறா அதிமுகவை ஒருங்கிணைக்குமா என்பதுதான் தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in