`பேரறிவாளன் விடுதலை அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி'- ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை!

`பேரறிவாளன் விடுதலை அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி'- ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டறிக்கை!
ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை அறிவிப்பை அடுத்து பல்வேறு தலைவர்களும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பேரறிவாளன் விடுதலை என்பது அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “30 ஆண்டுக்காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ‘மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி பேரறிவாளனையும், அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேர்களையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும்’ என்று 2014-ம் ஆண்டு சட்ட மன்றத்தில் அறிவித்ததை நினைவு கூறவிரும்புகிறோம். அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடித்தளமாகும். இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in