`அதிமுகவின் வெற்றிக்கு களங்கம் விளைவிக்க வழி தேடுகிறார் ஓபிஎஸ்'- சொல்கிறார் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

`அதிமுகவின் வெற்றிக்கு களங்கம் விளைவிக்க வழி தேடுகிறார் ஓபிஎஸ்'- சொல்கிறார் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

``அதிமுகவின் வெற்றிக்கு களங்கம் விளைவிக்க ஓபிஎஸ் வழி தேடுகிறார்'' என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், ``குழப்பம் விளைவிக்கும் ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு, சுயேட்சையாக போட்டி , ஒரு புறம் பேச்சு வார்த்தை என மாறி, மாறி பேசுகிறார். அதிமுகவின் வெற்றிக்கு களங்கம் விளைவிக்க அவர் வழி தேடுகிறார். அதிமுக போட்டியிட வேண்டும் என வாசன் சொல்கிறார்.

ஈபிஎஸ் மீது குற்றம் சுமர்த்தவே, அரசியல் அறியாத ஒரு சிலர் இருவரும் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். வலுவில்லாதவர்களை வைத்துக்கொண்டு எதற்காக ஒன்றிணைய வேண்டும். இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம். அதிமுகவிற்கு உரியது தான் இரட்டை இலை. அது தான் எங்கள் அங்கீகாரம். ஈபிஎஸ்ஸிடம் உள்ளவர்கள் அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள்.

சட்ட விதிகளின்படி எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தவற வாய்ப்பில்லை. பாஜக எங்களை ஆதரிப்பர் என நம்புகிறோம்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in