குண்டர்களை ஏவி அதிமுக தலைமைக் கழகத்தை தகர்க்க முயன்றார் ஈபிஎஸ்: காவல் நிலையத்தில் ஓபிஎஸ் பகீர் புகார்

குண்டர்களை ஏவி அதிமுக தலைமைக் கழகத்தை தகர்க்க முயன்றார் ஈபிஎஸ்: காவல் நிலையத்தில் ஓபிஎஸ் பகீர் புகார்

குண்டர்களை ஏவி அதிமுக தலைமைக் கழகத்தை தகர்க்க முயன்ற எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடந்த 11-ம் தேதி ராயப்பேட்டை தலைமையகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இக்கலவரத்தில் காவலர்கள் காயம் அடைந்ததோடு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்னர். 400 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டார் திருடிச் சென்று விட்டதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர், ஈபிஎஸ் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் மீது நேற்று ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், `அதிமுக தலைமைக் கழகத்தில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் ரெக்கார்ட் டான்ஸ் ஆடி மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும், அது பற்றி மேலாளர் மகாலிங்கத்திடம் கேட்டதற்கு மரியாதை குறைவாக பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 11-ம் தேதி ஓ.பி.எஸ், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் வழக்கமாக கட்சிப் பணியாற்ற வேண்டி தலைமைக் கழகத்திற்கு தொண்டர்களுடன் சென்ற போது அங்கு கூடியிருந்த தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் வி.என்.ரவி, எம்.கே.அசோக், ஆதி ராஜாராம் ஆகியோர் ஈ.பி.எஸ் தூண்டுதலின் பேரில் குண்டர்களுடன் கத்தி, கற்கள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தலைமை அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் தங்களை சரமாரியாக தாக்கினர்.

இதனைத் தொடர்ந்து ரவுடிகள் சிலர் தலைமைக் கழகத்தின் உள்கதவை பூட்டியதால் தொண்டர்கள் கதவை திறந்து, ஓ.பன்னீர் செல்வத்தை அறைக்குள் பத்திரமாக அழைத்து சென்றனர். அப்போது இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை தூக்கி வீசி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் தொண்டர்கள் சிலர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் வந்த வாகனத்தில் பாதுகாப்பாக வைத்தனர். தலைமைக் கழகத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மேலாளர் மகாலிங்கம் மற்றும் துணை மேலாளர் மனோகரன் ஆகியோர் திருடி சென்றனர்.

குறிப்பாக ஜெயலலிதா காலத்திலிருந்தே முக்கிய ஆவணங்கள் மற்றும் இருப்பு தொகையை தலைமைக் கழகத்திற்குள் வைப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர் என்பதால் ஓ.பன்னீர் செல்வம் வங்கிக் கணக்கில் இருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் நாங்கள் எல்லாம் சேர்ந்து தலைமைக் கழக சொத்துகளை திருடிவிட்டதாக சி.வி.சண்முகம் புகார் அளித்திருப்பது முற்றிலும் தவறானது. மேலும் குண்டர்களை ஏவி தலைமைக் கழகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்த தூண்டிய எடப்பாடி பழனிசாமி, பொய் புகார் அளித்த சி.வி.சண்முகம், கொலை வெறி தாக்குதல் நடத்திய வி.என்.ரவி, ஆதி ராஜா' என கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in