ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்!

ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுத் தாக்கல்
ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுத் தாக்கல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சியினர் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்னும் வாக்கு சேகரிக்கவில்லை. எடப்பாடி தரப்பில் தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோட்டில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்கள் படம் இல்லாதது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுத் தாக்கல்
ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுத் தாக்கல்

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பாளர் அறிவிப்பில் முந்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் ஏன் காலதாமதம் ஆகிறது எந்த கேள்வியும் எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in