நானும் ரவுடி தான் வடிவேலு போல காமெடி செய்கிறார் ஓபிஎஸ்: கடம்பூர் ராஜூ கிண்டல்

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ ஓ.பன்னீர் செல்வம் வேண்டுமானால் சசிகலா, டிடிவி தினகரனோடு கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என விமர்சனம் செய்துள்ளார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே பேசி உள்ளார். ஒ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்த போதுதான் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது வென்றவர்களை வைத்துத்தான் பொதுக்குழுவும் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு, செலவு கணக்குகளைத் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

கட்சியும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையும் எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. அதனால் ஓ.பன்னீர் செல்வம் தான் தனிக்கட்சித் தொடங்க வேண்டும். அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியில் உள்ளது. ஒருபடத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் என வாலண்டியராக வண்டியில் ஏறுவார். அதேபோல் தான் ஓ.பன்னீர் செல்வம் பாஜக தன்னை மதிப்பதாகச் சொல்லிவருகிறார். எங்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சசிகலா, டிடிவி தினகரன் என யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். அது அவரது விருப்பம் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in