
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி கழக முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கடந்த செப்டம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31ம் தேதி அன்று அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமீனை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!