12 மணி நேர வேலை மசோதா: தமிழக அரசுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்12 மணி நேர வேலை மசோதா: தமிழக அரசுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

சென்னையில் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் போலீஸார் கைது செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை சட்டமசோதாவைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாக்கல் செய்து அது நிறைவேற்றப்பட்டது. இதற்குத் திமுக கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தன. மே 12-ம் தேதி சட்டமசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டமசோதாவிற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கும் 12 மணி நேர வேலை மசோதாவில் 6 விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றில் எவ்வளவு நேரம் வேலைச் செய்ய வேண்டும். கூடுதலாக எவ்வளவு நேரம் வேலைச் செய்தால் கூடுதல் ஊதியம் போன்றவை குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in