சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்: எதிர்க்கட்சிகள் முடிவு!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்: எதிர்க்கட்சிகள் முடிவு!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்ப எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். இன்று ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், திட்டமிடப்பட்டதற்கு ஒரு வாரம் முன்னதாக, நாளை (டிசம்பர் 23) முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அருணாசல பிரதேச மாநிலத்தின் தவாங்கில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து விவாதிக்கக் கோரி, நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் நேற்று மக்களவையில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் சீனாவின் அத்துமீறல் குறித்து டிசம்பர் 21-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் கவலை தெரிவித்தார். இதுகுறித்து சிபிபி தலைவர் சோனியா காந்தி, "நமது எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் இந்த தாக்குதல்களை முறியடித்த நமது உஷாரான ராணுவ வீரர்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது. ஆனால், இது குறித்து விவாதிக்க அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். இதன் விளைவாக, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் களத்தில் உள்ள உண்மை நிலையை அறியாமல் உள்ளனர்" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in