ஓபிஎஸ் நினைத்தால் ஈபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க முடியும்: உறுதிபடக்கூறும் பெங்களூரு புகழேந்தி!

ஓபிஎஸ் நினைத்தால் ஈபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க முடியும்: உறுதிபடக்கூறும் பெங்களூரு புகழேந்தி!
பெங்களூரு புகழேந்தி

கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் நினைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு நேற்று ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி அங்கு நின்றிருந்த தொண்டர்களிடம் காரை நிறுத்தி இறங்கி பேசிக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பெங்களூரு புகழேந்தி கூறுகையில், " ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும். அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது.

ஈபிஎஸ் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். நான்கு வருடத்தில் கொள்ளை அடித்தவர்கள் தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். ஒன்றிய, மாவட்ட, நகர செயலாளர்கள் யாரும் இதில் முடிவெடுக்க முடியாது. தொண்டன்தான் முடிவெடுக்க முடியும். ஓபிஎஸ்சை எடுக்க வேண்டும் என முடிவு செய்தால் இரண்டு பொதுக்குழுதான் நடக்கும். அதிமுகவில் நிலவும் ரவுடியிசத்துக்கு காரணம் ஜெயக்குமார் தான்" என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in