சென்னை விழாவில் அமித்ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை விழாவில் அமித்ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னனயில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.

திண்டுக்கல்லில் நேற்று நடந்த காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் காத்திருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்காமல் பிரதமர் மோடி திண்டுக்கல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விழா முடிந்து கார் மார்க்கமாக மதுரை திரும்பிய பிரதமரை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வழியனுப்ப மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அவர்களிடம் கைகுலுக்கினார் பிரதமர் மோடி. மூன்று பேரும் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று சென்னை வந்தார். முன்னதாக கமலாலயம் சென்ற அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து விழாவில் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்றார். இந்த சந்திப்பின் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். இருவரும் தனியாக சந்திக்கவில்லை என்பதால் அதிமுக பிரச்சினை தொடர்பாக எதுவும் பேசி இருக்க வாய்ப்பு இல்லை.

இந்த விழாவில் பேசிய அமித் ஷா, மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழ் மொழியின் பெருமை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா அனைத்திற்குமானது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in